"INTERNATIONAL INDUSTRY EXPO 2024 "  கண்காட்சிக்கான அனுசரணை காசோலைகள் வழங்கப்பட்டன

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை கொண்டுசெல்லும் நோக்கில்  கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை இணைந்து ஏற்பாடு செய்யும் “International Industry Expo 2024 Sri Lanka”  முதலாவது  சர்வதேச கைத்தொழில் கண்காட்சிக்கான அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அனுசரணை காசோலைகள் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண அவர்களிடம் அடையாளபூர்வமாக பெப்ரவரி 12 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் கையளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில்  Industry 2023 தேசிய கைத்தொழில் கண்காட்சியானது கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு நான்கு கண்காட்சிகள் நடாத்தப்பட்டதுடன் அந்தக் கண்காட்சிகள் ஊடாக உள்நாட்டுக் கைத்தொழில் துறையில் பாரிய  புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு முடியுமாகியது. அதன் அடுத்த கட்டமாக உள்ளூர் கைத்தொழில்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் இந்த “International Industry Expo 2024 Sri Lanka”  கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியின் பிரதான அனுசரணையாளர்களாக Power Hands Plantation  தனியார் கம்பனி, TVS Lanka தனியார் கம்பனி,  Hayleys Solar தனியார் கம்பனி,  SMR Consolidated கம்பனி, American Premium Water Systems தனியார் கம்பனி   மற்றும் Accolade Engineering தனியார் கம்பனி ஆகிய கம்பனிகள் இன்றைய தினம் அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களிடம் அனுசரணை காசோலைகளை வழங்கின.

ஜூன் 19 முதல் 23 வரை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள்கைத்தொழிலாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்களின் 1000 இற்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களைக் கொண்ட இந்த மாபெரும் கண்காட்சியானது சர்வதேச கருத்தரங்குகள், கைத்தொழில்துறை கருத்தரங்குகள்இலங்கையின் மரபுவழி வரும் ஆடையலங்காரக் கண்காட்சிகள்உள்நாட்டில்  பாகங்கள் ஒன்றிணைக்கப்பட் வாகன அணிவகுப்புகள், புத்தாக்க உற்பத்திக் கைத்தொழில்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்த அனுசரணை காசோலைகளை வழங்கும் நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று  உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.