Current NoticeS

  • The Ministry of Industries, in collaboration with the Sri Lanka Food Processors Association (SLFPA), is proudly hosting the 21st Profood Propack Exhibition – 2024.
  • This event is recognized as the largest exhibition in Sri Lanka for the Processed Food Sector.
  • The Ministry is offering a special pavilion with 10 stalls dedicated to micro and small processed food businesses.
  • These businesses can participate in the pavilion for a discounted rate of 50% of the regular stall fee.
  •  Apply now before July 26th, 2024 using the Google Link or QR code provided by the Ministry.  ( MINISTRY OF INDUSTRIES SME PAVILION – PROFOOD PROPACK EXHIBITION 2024  ) For more details, refer to the advertisement.

Sinhala

English

Tamil

கைத்தொழில் அமைச்சின் நிதி மற்றும் மேற்பார்வையின் கீழ் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் வழிகாட்டலில் அழகு சாதன  கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.  அதற்கிணங்க முதலாம் கட்டமாக IDB ஆல் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினால் 30 பயனாளிக் கைத்தொழில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல்கள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.  அதனூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பனை உற்பத்திக் கைத்தொழிற்சாலைகளுக்கு அந்த உற்பத்தியாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தேவையான தரச் சோதனை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான செலவாக உச்சளவாக ரூ.100,000 வீதம் வழங்கப்படும்.  

மேலும், இரண்டாவது கட்டம் 2023.11.10 ஆம் திகதி  இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, முதலாம் கட்டமான  அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திகளை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தொடர்புடைய ஆய்வுகளுக்காக அனுப்பும் பணியை நிறைவு செய்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அழகு சாதன  கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு தேவையான  தயாரிப்பு தரம், உற்பத்தி செயல்முறை, தர உத்தரவாதம், உற்பத்தி ஒழுங்குவிதிகள், சந்தைப்படுத்தல் ஆகிய பிரிவுகளுக்குத் தேவையான அறிவை தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெற்றுக்கொடுத்தல் இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சி நிகழ்ச்சிகள்  2023.11.17 மற்றும் 2023.11.24  ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மேலும், மூன்றாம் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அழகுசாதன உற்பத்திக் கைத்தொழில்களுக்கு ஒரு பிரதான அழகுசாதன உற்பத்திக் கைத்தொழிலொன்றில் கள கண்காணிப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

தகவல்கள்