பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்திய 10 ஆசிரியர்கள் இந்தியா பயணம்.....

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட  பொருளாதாரமொன்றின் நிமித்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில்முயற்சிகள்  தலைமைத்துவத்தை பாடசாலையிலேயே இனங்கண்டு  அவர்களை ஊக்குவித்து எதிர்காலத்தில் திறமையான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன், கைத்தொழில்  மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களிடையே அவற்றை சிறப்பான வகையில் நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளின்  கைத்தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களுக்குப் பொறுப்பான   பத்து ஆசிரியர்களுக்கு இந்தியாவில் கைத்தொழில் துறைகளை ஆராய்வதற்கான ஆய்வு சுற்றுலாவொன்றுக்கான வாய்ப்பை வழங்குவதற்கு கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய  9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட பத்து ஆசிரியர்கள் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்த விஜயத்தின்போது பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கைத்தொழிற்சாலைகளை அவதானிப்பதற்கான வாய்ப்பு அந்த ஆசிரியர்களுக்குக் கிடைத்தது.

விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி  கைத்தொழில் அமைச்சில்  கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண அவர்களைச் சந்தித்த அந்த ஆசிரியர்கள்  அந்த ஆய்வு  விஜயத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தை தமது பாடசாலைகளின் தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் விதம் பற்றியும், அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் மாத்திரமன்றி பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் வட்டங்களில் வெற்றிகரமாக முன்னறி வரும் பாடசாலை தொழில்முயற்சியாளர்களையும் தெரிவு செய்து எதிர்காலத்தில் அவர்களுக்கும்  தொழில் முயற்சிகள் தொடர்பான வெளிநாட்டு கல்விச் சுற்றுலாக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்தார். இந்த சந்திப்பின்போது இந்த ஆசிரியர்கள், ஏற்கனவே தமது பாடசாலைகளில் ​​தொழில்முயற்சியாளர்கள் வட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக செயற்படுவதாகவும், அந்த வட்டங்களில் உள்ள மாணவர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், சில பாடசாலை தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி சந்தையில் விற்பனைக்கு விடுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். இங்கு மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட சில பொருட்களையும் அந்த ஆசிரியர்கள் அமைச்சரிடம் காண்பித்ததுடன், அந்தத் தயாரிப்புகளின் தரம் மற்றும் வடிவமைப்பை அமைச்சர் பாராட்டினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்கள், தற்போது நாடளாவிய ரீதியில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் சுமார் 10,000 பாடசாலை மாணவர்கள் இங்கு செயற்படுகின்றனர். தற்போது சில பாடசாலைகளில் பாடசாலை மட்டத்தில் உற்பத்திக் கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில் முயற்சிகள் அபிவிருத்திப் பணிப்பாளர் ரேணுக்கா ஜயலத், உதவிப் பணிப்பாளர் கலாநிதி சமிந்த ரணதுங்ககே ஆகியோர் கலந்துகொண்டனர்.