அறிமுகம்

தொழில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு என இலங்கையின் முதல் அமைச்சுக்களில் ஒன்றாக 1931 இல் நிறுவப்பட்ட இந்த அமைச்சு, கைத்தொழில் துறையின்  விருத்திக்கான முதன்மைப் பொறுப்பை வகிக்கிறது. இலக்கம்: 2196/27 மற்றும் 2020.10.06 ஆம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ‘ கைத்தொழில் பல்வகைப்படுத்தல் ஊடாக உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச விநியோக வலையமைப்புடன் இணைந்து உலகளாவிய போட்டியில் ஒப்பீட்டு அடிப்படையிலான இலாபங்களை அடைந்துகொள்வதற்காக நவீன உபாயவழிகள் ஊடாக உள்நாட்டுக் கைத்தொழில் துறையை  பலப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல்’ கைத்தொழில் அமைச்சின் தற்போதைய விடயப்பரப்பாகும்.

மூன்று இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 17 பல்வேறு நியதச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் கைத்தொழில் அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும், 1969 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்திச் சட்டம், 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்  ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை இந்த அமைச்சு கொண்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் இந்த அமைச்சின் விசேட முன்னுரிமைகளாக இனங்காணப்பட்டுள்ளன

  • கைத்தொழிலதிபர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை தயாரித்தல்
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறையை மிகவும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை தயாரித்தல்
  • ஏற்றுமதியுடன் தொடர்புடைய செயல்முறையை பலப்படுத்துவதற்கான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல்
  • தற்போதுள்ள கைத்தொழில்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துதல் மற்றும் புதிய கைத்தொழில்துறை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்
  • வீழ்ச்சியடைந்துள்ள கைத்தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.
  • உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களைப் பாதுகாத்தல் மற்றும் பலப்படுத்துதல்
  • ஏறாவூரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் பூங்காவிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
  • கனிய வளங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நாட்டின் உற்பத்தி செயல்முறையை பலப்படுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளல்.

தூர நோக்கு

உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த, நிலைபெறுதகு மற்றும் தனித்துவமான இலங்கை உற்பத்திக் கைத்தொழில்துறை

செயற்பணி

தொழில்நுட்பம், அறிவு மற்றும் புத்தாக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் பலதரப்பட்ட, உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட, புதிய கைத்தொழில்துறை உற்பத்திகள், சுற்றுச்சூழல்நேய நேர்மையான செயல்முறைகள் பயன்பாட்டை ஊக்குவித்தல்,  சந்தைக்கான உயர் பிரவேச  வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் அனுகூலங்கள் கிடைக்கும் கைத்தொழில்துறை அபிவிருத்தியை உறுதிப்படுத்தல்

Special Priorities of the Ministry

      • Effective Use of Sri Lanka’s Mineral Resources for National Development
      • Facilities for Production of Solar Energy / Electric Cars
      • Supporting and facilitating to remove barriers and develop a friendly environment for industries and export industries
      • Expand the opportunities and develop a system for enhancing skilled young and female entrepreneurs

Goals of the Ministry of Industries

      1. To Increase the industry contribution of the GDP from 26% to 30% by 2030
      2. To increase the Manufacturing sector contribution from 16% to 25% by 2030
      3. To increase the young and female entrepreneurship contribution in SME by 20% in 2025
      4. To increase the export share of GDP by 15% to 25% by 2030
      5. To increase the land extent for the Industrial Zones from 0.04% to 1% by 2025