கைத்தொழில் பதிவூ

பிரிவு: கைத்தொழில்துறை கொள்கைகள்

கிளை: கைத்தொழில்கள் பதிவு

சேவை : கைத்தொழில்களைப் பதிவு செய்தல்

1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில்கள் மேம்பாட்டுச் சட்டத்தின்  2 ஆம் பிரிவிற்கமைய ஒவ்வொரு கைத்தொழில் தொழில்முயற்சியாளர்களும் தனது உற்பத்தித் வேலைத் தளங்களை கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்தல் வேண்டும். அதற்கிணங்க, எமது  நாட்டில் காணப்படும் அனைத்து உற்பத்திக் கைத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் அந்தத் தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேலைத்தளங்கள் அல்லது இடங்கள் கைத்தொழில் பதிவாளரிடம் பதிவு செய்யப்படல் வேண்டும். (இது முதலீட்டு சபை அனுமதிப்பத்திர உரிமையாளர்களுக்கு ஏற்புடையதாகாது) 

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்களை கைத்தொழில் பதிவுப் பிரிவுக்கு அல்லது கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள பிரதேச கைத்தொழில் சேவை நிலையங்களிடம் கையளித்தல் அல்லது உதவிப் பணிப்பாளர், கைத்தொழில் பதிவுப் பிரிவு, கைத்தொழில் அமைச்சு, இல.73/1, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப முடியும்.

களச் சோதனையை மேற்கொண்டதன் பின்னர்  தககைமைகளைப் பூர்த்தி செய்துள்ள கைத்தொழில் நிறுவனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

குறித்த பதிவுச் சான்றிதழை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையான காலப் பகுதியினுள் அமைச்சுக்கு வருகைதந்து அல்லது விண்ணப்பதாரரின் வேண்டுகோளின் பேரில்பதிவுத் தபால் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

(checklist pdf)  , எனும் இடையிணைப்பியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு (registration pdf) எனும் இடையிணைப்பியைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு (Checklist.pdf)  எனும் இடையிணைப்பியைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

பிரிவு: கைத்தொழில்கள் பதிவு

கிளை: கைத்தொழில்கள் பதிவு 

சேவை : கைத்தொழில்களைப் பதிவு செய்தல்

பெயர்: பி.குணாலினி

சேவை: இலங்கை நிர்வாக சேவை iii

பதவி: உதவிப் பணிப்பாளர்

தொலைபேசி : 011-2448467

கிளைத் தொலைபேசி : 299

தொலைநகல் : 011-2542708

மின்னஞ்சல்: industry.regist@gmail.com

ad_ir@industry.gov.lk