பொசன் கொண்டாட்டம் ……

பொசன் கொண்டாட்டம் …… பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற பக்தி கீத நிகழ்ச்சி அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பக்தி கீத நிகழ்ச்சியில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இம்முறை பக்தி கீத நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, அமைச்சின் அனைத்து அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் சுற்றியுள்ள அலுவலகங்களின் ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்காகக் கடலைத் தன்சல (தானம்) ஒன்று நடாத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

இலங்கையின் முதலாவது நிகழ்வு நாட்காட்டி வெளியீடு

இலங்கையின் முதலாவது நிகழ்வு நாட்காட்டி வெளியீடு நிகழ்வு முகாமைத்துவ (Event Management) கைத்தொழிற்துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்று, இலங்கையின் முதலாவது நிகழ்வு நாட்காட்டி (Sri Lanka Event Calendar), கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் அண்மையில் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட புதிய கைத்தொழில் துறைகளில் நிகழ்வு முகாமைத்துவ கைத்தொழில் துறையானது முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளதுடன், இது கடந்த ஆண்டில் (2025) 60 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மாபெரும் கைத்தொழில் துறையாக விளங்குகின்றது. இந்தக் கைத்தொழில் துறையை மேலும் அபிவிருத்தி செய்யவும், முயற்சியாளர்கள் தங்களது வணிகங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கவும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், நிகழ்வு முகாமைத்துவ ஆலோசனைக் குழுவினால் “இலங்கை நிகழ்வு நாட்காட்டி” தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சுற்றுலாத்துறையுடன் இணைந்து, கலாசார விழாக்கள், விளையாட்டுக்கள், உயர்மட்டக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள், கண்காட்சிகள் உட்பட இந்நாட்டில் நடத்தப்படும் முன்னணிக் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த உத்தியோகபூர்வ வழிகாட்டியாக இந்த “இலங்கை நிகழ்வு நாட்காட்டி” செயல்படும். இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி, நமது நாட்டின் புவியியல் அமைவிடத்திற்கு ஏற்ப இலங்கைக்கு இத்துறையில் மிகச்சிறந்த பல வாய்ப்புகள் இயல்பாகவே கிடைத்துள்ளன என்றும், பெருமளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித் தருவதுடன் அதிகளவிலான மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ள இக்கைத்தொழிற்துறைக்குத் தேவையான வசதிகளை வழங்கி, இதற்கான அதிகபட்ச பங்களிப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்தார். அத்துடன், சுற்றுலாத்துறையை ஊக்குவித்து, இலங்கையை நிகழ்வு முகாமைத்துவத்திற்கான ஒரு மையமாக (Hub) மாற்றுவதே தமது அமைச்சின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் ஹந்துன்னெத்தி மேலும் குறிப்பிட்டார். இந்நிகழ்வு முகாமைத்துவ (Event Management) கைத்தொழில் துறையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இத்துறைக்கு புதிதாக நுழைபவர்களுக்கும் இத்துறை குறித்த முறையான கல்வி அறிவை வழங்குவதற்காக சர்வதேச நிகழ்வு முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய டிப்ளோமா பாடநெறி அறிமுகப்படுத்தப்படுவதும் இங்கு இடம்பெற்றது.

தேசிய 4i திட்டமானது இளம் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்குத் தகுதியானவர்களாகக் கட்டியெழுப்புகிறது.

தேசிய 4i திட்டமானது இளம் தொழில்முனைவோரை உலகளாவிய சந்தைக்குத் தகுதியானவர்களாகக் கட்டியெழுப்புகிறது. தேசிய 1,000 இளம் தொழில்முனைவோரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் (4i திட்டம்) மாவட்ட ஒருங்கிணைப்பு (லியாசான்) அதிகாரிகளுக்கான விசேட பயிற்சித் திட்டமொன்று, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களாக கொழும்பு அறக்கட்டளை நிறுவனத்தில் (Colombo Foundation Institute) நடைபெற்றது. இப்பயிற்சித் திட்டம் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி மாவட்ட செயலாளர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 40 அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் இந்த 4i திட்டமானது, 1,000 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் அவர்கள் உலகளாவிய சந்தையை வெற்றிகரமாக அணுகுவதற்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் ஏற்றுமதிச் சந்தையை அணுகும்போது எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், அதன் மூலம் அவர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக கம்பஹ மாவட்டத்தில் இதற்கான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டதுடன், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நூறு இளம் முயற்சியாளர்கள் வலுவூட்டப்பட்டனர். அந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியின் அடிப்படையில் மேலும் ஆயிரம் இளம் முயற்சியாளர்களை இத்திட்டத்தின் ஊடாக வலுவூட்டுவதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்தெரிவு செய்யப்பட்ட மாவட்ட தொடர்பு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த 4I திட்டத்தை செயல்படுத்துவதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு எதிர்பார்க்கின்றது. அத்துடன், இளம் முயற்சியாளர்களுக்கான வலுவான தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயத் திட்டமிடல் குறித்து மாவட்ட தொடர்பு அதிகாரிகளுக்கு இப்பயிற்சித் திட்டத்தில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இப்பயிற்சித் திட்டத்தின் போது, முன்னோடித் திட்டத்தின் மூலம் வலுவூட்டப்பட்ட முயற்சியாளர்களின் தொழிற்சாலைகளுக்குச் சென்று கள அவதானிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த தொடர்பு அதிகாரிகளுக்கு இப்பயிற்சித் திட்டத்தின் போது வாய்ப்புக் கிடைத்தது.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கை பொருளாதாரத்தின் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 2026–2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது (NEDP), 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டல்களுக்கு இணங்க, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதையும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய வேலைத்திட்டமாகும். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை சார்ந்த கடன் (PBL) திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பரந்த ஆலோசனை செயல்முறையின் விளைவாகும். அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை நிபுணர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளர்களின் பொதுவான உடன்பாட்டுடன் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் ஏற்றுமதி பன்முகப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக ஆறு ‘கிடைமட்டத் துறைகளும்’ (Horizontals) மற்றும் எட்டு ‘முன்னணி ஏற்றுமதித் துறைகளும்’ (Verticals) அடையாளம் காணப்பட்டுள்ளன. “வளமான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் தேசிய தொலைநோக்குக் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதற்கும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளில் இலங்கையை ஒரு போட்டித்திறன் மிக்க, விநியோகச் சங்கிலி மற்றும் அறிவு சார் ஏற்றுமதி மையமாக இலங்கையை மாற்றுவதே இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் பிரதான தொலைநோக்காகும். இதன் மூலம் தயாரிப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார இஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாகச் செயல்படும்.

ஆடைத் துறையின் திறன் அபிவிருத்திக்காக நவீன பல்நோக்குக் கட்டடம் மாணவர்களிடம் ஒப்படைப்பு…

ஆடைத் துறையின் திறன் அபிவிருத்திக்காக நவீன பல்நோக்குக் கட்டடம் மாணவர்களிடம் ஒப்படைப்பு… கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இரத்மலானையில் அமைந்துள்ள, இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தில் (SLITA) நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி பல்நோக்குக் கட்டடம், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் அண்மையில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் உயர் கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்தி, அத்துறையின் திறன் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட இந்த புதிய மூன்று மாடி பல்நோக்குக் கட்டடமானது, 150 கணினிகளைக் கொண்ட CAD ஆய்வகம், முழுமையான வசதிகள் கொண்ட வடிவமைப்புக் கூடம் (Art and Fashion Studio), நவீன மண்டபம், நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று மாடி பல்நோக்குக் கட்டடமானது, ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் தொழில்வாய்ப்புக்களுக்கான உள்நுழையும் பிள்ளைகளுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் ஒரு நவீன கற்றல் சூழலை உருவாக்குவதுடன், அவர்கள் சர்வதேச மட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான வழியையும் திறந்து விடுகின்றது. அத்துடன், மாணவர்களின் புத்தாக்கக் கல்வி, ஆக்கத்திறன் மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்குகின்றன. 2024 ஆம் ஆண்டில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மூன்று மாடி பல்நோக்குக் கட்டடத்திற்காக 520 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது இங்கு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி, ஆடைத் துறையானது  இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் முதன்மையான வழிகளில் ஒன்றாக ஆடைத் துறை விளங்குவதால், இத்துறையின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி, திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அத்துடன், இத்துறைக்கு ஆக்கத்திறன் கொண்ட புத்தாக்குநர்களின் தேவைப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச மட்டத்திலான ஆடை உற்பத்திகளுக்குத் தேவையான ஒரு கல்வி மையமாக இலங்கையை மாற்றுவதே தமது அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

ஆடைத் துறைக்கு திறமைமிக்க தொழில் வல்லுநர்களை உருவாக்கி, SLITA Campus இருந்து 596 டிப்ளோமா தாரிகள்…

ஆடைத் துறைக்கு திறமைமிக்க தொழில் வல்லுநர்களை உருவாக்கி, SLITA Campus இருந்து 596 டிப்ளோமா தாரிகள்… 2025 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 17.25 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 4.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆடைத் துறையிலிருந்தே கிடைத்துள்ளதுடன், இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதில் ஆடைத் தொழில்துறையே பிரதான பங்களிப்பை வழங்கும் துறையாக விளங்குகின்றது என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தின் (SLITA) கீழ் இயங்கும் SLITA Campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் முன்னேற்றத்திற்காக தொழில் வல்லுநர்களை உருவாக்கும் முதன்மையான அரச உயர் கல்வி நிறுவனமான இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் (SLITA), தங்களது கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 596 டிப்ளோமா தாரிகளுக்கு டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியது. 2009 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழில்துறைகளில் ஒன்றான ஆடைத் துறைக்குத் தேவையான திறமையான பட்டதாரிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் பயிற்றுவிக்கும் ஒரு சிறந்த மையமாகும். கல்வி, புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் சிறந்து விளங்குதல் ஆகியவற்றின் ஊடாக இந்நாட்டு ஆடைத் தொழில்துறையின் எதிர்காலத்தை வலுவூட்டுவதே இந்நிவனத்தின் முக்கிய நோக்கமாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்துறை தரநிலைகளுக்கு இணங்க பல குறுகிய கால பாடநெறிகள், சான்றிதழ் பத்திர, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகளை இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் நடத்தி வருகின்றது. நவீன ஆய்வக வசதிகள், அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள், வலுவான தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் நடைமுறை பயிற்சி வாய்ப்புகள் மூலம், வேகமாக மாறிவரும் ஆடைத் துறைக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களுடன் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு இந் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனமானது ஆடைத் துறைக்கான ஒரு கல்வி நிறுவனமாக சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்து வருவதுடன், ஆடைத் தொழில்துறைக்கு பெரும் சேவையாற்றி அத்துறைக்குத் தேவையான திறமையான மனித வளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது என திருமதி திலகா ஜயசுந்தர அவர்கள் இங்கு தெரிவித்தார்.

இலங்கையின் முதல் தேசிய தொழில்துறை தகவல் அமைப்பு தொடங்கப்பட்டது…

இலங்கையின் முதல் தேசிய தொழில்துறை தகவல் அமைப்பு தொடங்கப்பட்டது… இலங்கை முழுவதும் பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட புதிய டிஜிட்டல் தளமான தேசிய தொழில்துறை தகவல் அமைப்பு (NIIS), கொழும்பில் (06) அன்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் தொடங்கப்பட்டது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் செயல்படுத்தப்படும் தேசிய தொழில்துறை தகவல் அமைப்பு, கிரிசாலிஸின் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. தொழில்துறை துறைக்கான மைய தரவுத்தளமாக செயல்படும் இந்த தகவல் அமைப்பு, வணிக வகைப்பாடு, சட்ட நிலை, பதிவுத் தகவல், ஐ.நா. வகைப்பாடு, தொழில் அளவு, உற்பத்தித் தரவு, மூலப்பொருள் பயன்பாடு, சந்தை பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, எரிசக்தி மற்றும் எரிபொருள் நுகர்வு, கழிவு மேலாண்மை மற்றும் அகற்றல் முறைகள் உள்ளிட்ட இலங்கையில் செயல்படும் தொழில்களின் விவரங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் சொந்த பயனர் கணக்கை உருவாக்குவதன் மூலமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் மூலம் தகவல்களைச் சமர்ப்பிப்பதன் மூலமோ இந்த தேசிய தொழில்துறை தகவல் அமைப்பில் பதிவு செய்யலாம், மேலும் பதிவுசெய்த பிறகு, தேசிய தொழில்துறை தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக அங்கீகரிக்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் தொழில்துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த தகவல் அமைப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பதிவுசெய்யப்பட்ட தொழில்கள் தங்கள் வணிகத் தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது தொழில்துறை துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துல்லியமான தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வாய்ப்பளிக்கும். நாட்டின் தொழில்துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதல் படியை தொழில்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது என்றும், இந்த புதிய தேசிய தொழில்துறை தகவல் அமைப்பு கொள்கை உருவாக்கம், சந்தை ஆராய்ச்சி, போட்டி பகுப்பாய்வு மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றிற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாக செயல்படும் என்றும், இது இலங்கையின் தொழில்துறை துறை நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை அடைய வழி வகுக்கும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நேதி கூறினார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், கிரிசாலிஸின் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஒரு குழுவினர் கலந்து கொண்டனர்.  

இலங்கையின் கைவினைத் துறைக்கான NVQ வாய்ப்புகள்..

இலங்கையின் கைவினைத் துறைக்கான NVQ வாய்ப்புகள்… தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் தேசிய கைவினை மன்றத்தால் நடத்தப்பட்ட “பாடிக் டிசைனர் (NVQ – 3) பாடிக் தொழில் பயிற்சி பாடநெறி” மற்றும் “சிவப்பு களிமண் தொடர்பான கலைகள் மற்றும் கைவினைகளில் ஒரு வருட சான்றிதழ் பாடநெறி” ஆகியவற்றை முடித்த கைவினைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சமீபத்தில் (27 ஆம் தேதி) பத்தரமுல்ல கட்டுமானத் தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் (CETRAC) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடிக் துறையில் தற்போதுள்ள முறைசாரா பயிற்சி முறைகளுக்குப் பதிலாக, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் முறையான மற்றும் தரப்படுத்தப்பட்ட திறன் தரநிலைகளின்படி “பாடிக் டிசைனர் (NVQ – 3) பாடிக் தொழில் பயிற்சி பாடநெறியை” வெற்றிகரமாக முடித்த 32 கைவினைஞர்களும், நுண்கலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து முறையான பாடத்திட்டத்தின் மூலம் வரகொட பீங்கான் பயிற்சி மையத்தில் செயல்படுத்தப்படும் “சிவப்பு களிமண் கலை மற்றும் வடிவமைப்பில் ஒரு வருட சான்றிதழ் பாடநெறியை” முடித்த 9 கைவினைஞர்களும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டனர். இந்த வழியில் கைவினைஞர்களுக்கு தேசிய தொழில் தகுதிகளை வழங்குவது, அவர்களை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திறமையான கைவினைஞர்களாக உறுதிப்படுத்துவது, இலங்கையில் உள்ள முழு கைவினைத் துறைக்கும் ஒரு மிக முக்கியமான வாய்ப்பாகும். இந்த நிகழ்வில் பேசிய தேசிய கைவினை மன்றத்தின் தலைவர் டாக்டர் ஆயிஷா விக்ரமசிங்க, இந்த வழியில் பெறப்படும் தொழில்முறை தகுதி இலங்கை கைவினைஞர்கள் சர்வதேச சந்தையில் நுழைந்து அங்கு நிலையாக மாறுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார். ஒரு படைப்புத் தொழிலான இந்தத் தொழிலின் மதிப்பை பணத்தில் அளவிட முடியாது என்றும், இந்தத் தொழிலின் தயாரிப்புகள் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம் பெரும் விலையைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடவத்த, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் சுபத்ரா வல்பொல, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் ஜி. நிலந்த ரோஷன் பெரேரா, கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தின் மட்பாண்டத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் லலித் லன்சாகரா, மட்பாண்டத் துறையின் விரிவுரையாளர் டாக்டர் ரஞ்சித் வீரசிங்க, தேசிய கைவினை மன்றத்தின் துணை இயக்குநர் ஆனந்த ஜெயசிங்க, தேசிய கைவினை மன்றத்தின் அதிகாரிகள், சான்றளிக்கப்பட்ட கைவினைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கான புலனாய்வு மற்றும் ஆய்வுப் பிரிவு…..

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கான புலனாய்வு மற்றும் ஆய்வுப் பிரிவு……. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) அதிகாரிகளுக்கும், கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்திக்கும் இடையே 28 ஆம் தேதி பிடகோட்டேயில் உள்ள GSMB வளாகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த பணியகம், அக்டோபர் 18 முதல் கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1903 ஆம் ஆண்டு இலங்கை கனிம ஆய்வுத் துறையாக நிறுவப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், கனிம ஆய்வு, சுரங்க உரிமங்களை வழங்குதல், ஆய்வு மற்றும் குத்தகை உரிமைகளை நிர்வகித்தல், ஆய்வக சேவைகளைப் பராமரித்தல் மற்றும் புவியியல் தகவல்களை வழங்குதல் ஆகியவற்றுக்கு பொறுப்பாகும். இந்தக் கலந்துரையாடலின் போது, ​​இலங்கையின் பொருளாதாரத்திற்கு கனிம வளத் துறையின் தற்போதைய பங்களிப்பு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறினார். இந்தப் பங்களிப்பை அதிகபட்சமாக அதிகரிக்க, தொடர்புடைய செயல்பாடுகளை இயக்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்புகளுடன், கனிம வளங்கள் குறித்த தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் கனிம வளங்களுக்கு மதிப்பு கூட்டலின் முக்கியத்துவத்தை அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் கனிம வளத் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த தடைகளை அரசாங்கம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்தத் தடைகளை நீக்கி இலங்கைப் பொருளாதாரத்திற்குள் கனிமத் துறையை முறையாக நிலைநிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் வளாகத்தை அமைச்சர் ஹந்துன்னெட்டி ஆய்வு செய்தார், அங்கு ஊழியர்கள் தொடர்பான விஷயங்கள், உரிமச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தற்போதைய பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு விளக்கினர். இந்தச் சவால்களை திறம்பட நிவர்த்தி செய்ய பணியகத்திற்குள் ஒரு புலனாய்வு மற்றும் ஆய்வுப் பிரிவை நிறுவ வேண்டியதன் அவசரத் தேவையை அமைச்சர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜெயசுந்தர, ஜிஎஸ்எம்பி தலைவர் திரு. சமன் ஜெயசிங்க, இயக்குநர் ஜெனரல் மற்றும் புவியியலாளர் திருமதி. தீபானி வீரகோன், தொழில்துறை அமைச்சின் பல கூடுதல் செயலாளர்கள் மற்றும் பணியகத்தின் பல மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தீவு முழுவதும் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஒரு தேசிய திட்டத்தை தொழில்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது….

தீவு முழுவதும் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஒரு தேசிய திட்டத்தை தொழில்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது நாடு முழுவதும் 1000 இளம் தொழில்முனைவோரை உருவாக்கும் தேசிய திட்டம் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச உற்பத்தித்திறன் மேம்பாட்டு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறையை மேம்படுத்துதல் மற்றும் தொழில்முனைவோரின் அறிவு, திறன்கள், உற்பத்தித்திறன் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான திட்டமாக செயல்படுத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சித்திட்டம் முதன்முதலில் கம்பஹா மாவட்டத்தில் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டது, மேலும் முன்னோடி திட்டத்தின் போது 100 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டு, அதன் சிறந்த வெற்றியின் அடிப்படையில், இந்த திட்டத்தை தீவு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு 17 மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மீதமுள்ள 8 மாவட்டங்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இந்த திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், தொழில்முனைவோருக்கு ஆலோசனை ஆதரவு, பயிற்சி மற்றும் அவர்களின் வணிகங்களை நிலையான முறையில் வளர்ப்பதற்கு தேவையான வளங்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும். இந்த நிகழ்வில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மற்றும் பிராந்திய உற்பத்தித்திறன் மேம்பாட்டு அதிகாரிகளுக்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாட்டு கட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான மாவட்டக் குழு, மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டங்கள், தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டி மற்றும் தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் செயல்படுத்தப்படும் சமூக உற்பத்தித்திறன் திட்டம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்வில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அலோக பண்டார, அமைச்சின் கூடுதல் செயலாளர் (உள்நாட்டு விவகாரங்கள்), ஏ.ஜி. நிஷாந்த, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் இயக்குநர் நிரஞ்ச ஜெயக்கொடி, இலங்கை ஏற்றுமதி வாரியத்தின் தலைவர் மங்கள விஜேசிங்க, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கூடுதல் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்/அரசு முகவர்கள், தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.