நாட்டின் பாரம்பரிய கைவினைத் துறைக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கைவினைப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Ceylon Craft Week 2026” கைவினை மேம்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக நடத்தப்படும் கைவினைப் பொருட்காட்சி, அண்மையில் கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தின் ஜே.டி.ஏ. பெரேரா கலைக்கூடத்தில் நடைபெற்றது.
கைவினைப்பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் கைவினைத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கைவினைப் பொருட்காட்சியானது, கைவினைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சி மட்டத்தில் மேம்படுத்தப்பட்ட படைப்புகளைக் கொண்டிருந்தது.
இந்த பொருட்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. சுபத்ரா வல்பொல, தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் கலாநிதி திரு. ஆயேஷா விக்ரமசிங்க, கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தின் கட்புல கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சத்சர இலங்கசிங்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கைவினைஞர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.