பொசன் கொண்டாட்டம் ......

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற பக்தி கீத நிகழ்ச்சி அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பக்தி கீத நிகழ்ச்சியில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உட்பட அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இம்முறை பக்தி கீத நிகழ்ச்சியுடன் இணைந்ததாக, அமைச்சின் அனைத்து அதிகாரிகளினதும் ஒத்துழைப்புடன் சுற்றியுள்ள அலுவலகங்களின் ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்காகக் கடலைத் தன்சல (தானம்) ஒன்று நடாத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.