பொறியியல் பிரிவு
பொறியியல் பிரிவு
(பொறியியலாளர்) திரு. டி.பி.என். விஜேசிறி
பணிப்பாளர் நாயகம் (பொறியியல்)
சேவை: Sri Lanka Engineering Service
பதவி: பணிப்பாளர் நாயகம் (பொறியியல்)
தொலைபேசி: 0112423965
பிரிவின் தொடபு: 208
மின்னஞ்சல்: dpn.wijesiri@gmail.com
பணிகள்:
- 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றல்.
- கைத்தொழில் துறையின் பொறியியல் சார்ந்த பணிகளுடன் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல்.
- கைத்தொழில் அமைச்சின் கட்டிடங்கள் மற்றும் இயந்திர சாதனங்களுடன் தொடர்புடைய அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு பரிந்துரைகளை முன்வைத்தல்.
- அமைச்சின் கீழ் நிலவுகின்ற கைத்தொழில் வலயங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தொழில்நுட்ப ரீதியிலான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் கைத்தொழில் வலயங்களுக்குரிய அரசாங்க கட்டிடங்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளை மே்பார்வை செய்தல் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.
- அமைச்சுக்கு சொந்தமான வாகனங்கள் குழாமை உரிய பிரகாரம் இயங்குகின்ற நிலையில் பேணி வரலுடன் தொடர்பான பழுதுபார்ப்புக்கள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளல், தீர்த்தொதுக்கப்பட்ட வாகனங்களை அகற்றுதல் தொடர்பான பணிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.
- அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் அரச தொழில் முயற்சிகள் நிறுவனங்களுடன் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களின் பொறியியல் சார்ந்த பணிகளின் பகுப்பாய்வு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள்.
- தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சார்ந்த பணிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம்சார் வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குதல்.
- பொறியியல் சார்ந்த அபாயங்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தல் மற்றும் அந்த அபாயங்களைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு உதவி புரிதல்.
பொறியியல் பிரிவு
(பொறியியலாளர்) திருமதி டபிள்யூ.டி.வி. குமாரதாச
உதவிப் பணிப்பாளர் (பொறியியல்)
சேவை: Sri Lanka Engineering Service
பதவி: உதவிப் பணிப்பாளர் (பொறியியல்)
தொலைபேசி: 0112330578
பிரிவின் தொடபு:354
மின்னஞ்சல்: dvkumaradasa@gmail.com
• 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றல்.
• முன்மொழியப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டைகளின் கட்டுமானப் பணிகள் தொடர்பான உள்ளக பாதைகள், நீர் மற்றும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீடுகளை ஆய்வு செய்தல்.
• தற்போது இயங்கி வரும் கைத்தொழிற் பேட்டைகளின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளுடன் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல் மற்றும் அந்த தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக (பராமரிப்பு) பெறப்பட்ட மதிப்பீடுகளை பரீட்சித்தல்.
• கைத்தொழில் அமைச்சின் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான மதிப்பீடுகளை தயாரித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.