GEM SRI LANKA 2027 பெங்கொக் நகரில் அறிமுகப்படுத்தல் ……

 

இலங்கையின் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை ஒரு புதிய உலகளாவிய பொருளாதார அத்தியாயத்தை நோக்கி இட்டுச்செல்லும் நோக்கில், Ceylon Gem & Jewelry Traders Association (CGJTA) முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “GEM SRI LANKA 2027” கண்காட்சியின் முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விளம்பர நிகழ்ச்சி அண்மையில் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றது. 250 இற்க்கும் மேற்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள், கொள்வனவாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழிற்துறையின் முன்னணி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வானது, இலங்கையின் உள்நாட்டு இரத்தினக்கல் தொழிற்துறையின் சர்வதேச அங்கீகாரத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படலாம்.

 

​இங்கு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பதப்படுத்தப்படாத இரத்தினக்கற்களை மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, உயர் மதிப்பு கூட்டப்பட்ட (Value Addition) தயாரிப்புகளின் மூலம் உலகளாவிய சந்தையில் அதிகபட்ச மதிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முறையானதொரு கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

 

“The Source. The Production. The Selection.” எனும் தொனிப்பொருளின் கீழ் பெங்கொக் நகரில் எடுக்கப்பட்ட இந்த வெற்றிகரமான கால்வைப்புடன், “GEM SRI LANKA 2027” பிரமாண்ட இரத்தினக்கல் கண்காட்சியை 2027 ஜனவரி 07 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை கொழும்பு ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.