கைத்தொழில் நிகழ்வுகள் சமீப செய்திகள்
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்: 

கைத்தொழிலும் சுற்றாடலும்

நிலைபெறத்தக்க அபிவிருத்தியின் முழுமொத்த வேலைச் சட்டகத்தினுள் சருவதேய சமவாயங்கள், ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பதற்கு கைத்தொழிலுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த அமைச்சு முயற்சிகளுள் வருகிறது. தற்போதைய உலகளாவிய சுற்றாடற் சூழ்நிலைகளில், உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தத்தக்க, சுற்றாடலுக்கு இணக்கமான கைத்தொழில் உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வது, WTO உடன்படிக்கைகளின் கீழ் தரப்பெறும் சைகைகள் அடங்கலாக சருவதேயச் சமவாயங்கள் வழியில் எழும் கடப்பாடுகள் காரணமாக, அத்தியாவசியமானதாக ஆகியுள்ளது. அதிக அபிவிருத்தி கண்டுள்ள நாடுகள் அவற்றின் சந்தைகளுள் நுழைவதற்கான முற்தேவையாக சுற்றாடல் நியமங்களை ஏனைய பொருளாதார, பொருளாதாரம் சாராத நிலைமைகளுடன் இணைத்துள்ளன. ஆதலின் இந்த நியமங்களுக்கு உதவுவது மிக முக்கியமானது ஆகியுள்ளது.

இவை, சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கத்துக்கு மட்டுமல்லாமல், கைத்தொழிலின் நிலைப்பு, வளர்ச்சி ஆகிவற்றுக்கும் மிக முக்கியமானது ஆகியுள்ளது. ஐரோப்பிய சமூக நாடுகள் அத்தகைய நியமங்களைக் கடைப்பிடிப்பது குறித்து கண்டிப்பாக உள்ளன. அத்தகைய நியமங்களில் போத்தலில் அடைத்த நீர், குழந்தை உணவு போன்ற உற்பத்திப் பொருள் நியமங்களும் ஆடைக் கைத்தொழில், புடைவைக் கைத்தொழில்களுக்கான ISO 17025, HACCP (இடர் பகுப்பாய்வு ஆபத்துக் கட்டுப்பாட்டு நிலை), ECO – Tex 1000 போன்ற ISO நியமங்கள், ECO – கட்டுத் துண்டுகள் போன்றவையும் சுற்றாடல் பற்றி அறிவிக்கும் உத்தேச உலகளாவிய முன்முனைவும் அடங்குகின்றன. இந்த நியமங்களிற் சில தற்போது செயற்படுத்தப்படவில்லை. எனினும், அவை அடுத்த தசாப்தத்தினுள் நிச்சயமாகச் செயற்படுத்தப்படும். ஆதலின் இலங்கைத் கைத்தொழில் உலக சந்தைகளில் போட்டி நிலையில் இருக்க வேண்டுமெனில் அவை எதிர்காலத்தில் இக்குறித்த தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு தயார் நிலைப்படுத்தப்படுதல் வேண்டும்.

இது, சுற்றாடல் அக்கறைகளுக்கு இடமளிக்கும் வகையில், கைத்தொழில்களினுள் தொழில்நுட்ப புத்தாக்கங்கள், இசைவாக்கங்களை தேவைப்படுத்தியுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு, இந்தத் தேவைப்பாடுகளுக்கு இயைபுற்றதாக கைத்தொழிலர்களை, நிலைபெறத்தக்க கைத்தொழில் அபிவிருத்தி பொருட்டு இழிவுப் பொருள்களை இயன்ற அளவு குறைத்தல், தொழிநுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் போன்ற கோட்பாடுகளை உளத்திற் பதிய வைக்கும் அதே வேளையில் துப்புரவான உற்பத்திப் பிரயோகம் போன்ற திறமுறைகளைக் கைக்கொள்ளுவதற்கு ஊக்குவித்துள்ளது.

சுற்றாடல் துறையில் அமைச்சின் பங்களிப்பை 03 பிரதான வகுதிகளின் கீழ் பரிசீலிக்க முடியும். அவை வருமாறு,

 • கொள்கை வகுத்தலில் அதன் பங்களிப்பு
 • இந்த இலக்குகளை எய்தப் பெறுவதற்கு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை தாபிப்பது நோக்கில் அதன் பங்களிப்பு.
 • அமைச்சின் சொந்த வேலைத் திட்டங்களில் அத்தகைய நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல்.

கொள்கை வகுப்பு தொடர்பில் அமைச்சு சுற்றாடல் விடயங்கள் குறித்து உயிர்ப்புள்ள பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த காலங்களிலும் அமைச்சு இந்தத் துறையில் சுறுசுறுப்பாகவே தொழிற்பட்டு வந்துள்ளது. இதற்கான நல்ல உபகரணங்களாக தேசிய கைத்தொழில் மாசு முகாமை கொள்கைக் கூற்று (1996), தேசிய சுற்றாடல் செயற் திட்டம் (கைத்தொழில் 1997 – 2001), கைத்தொழில் அபிவிருத்தியில் துப்புரவான உற்பத்தியை ஒன்றிணைத்தல் ஆகியன விளங்குகின்றன. இக் கொள்கைக் கூற்றுக்களை வகுத்தமைப்பதில் அமைச்சு உயிர்ப்புள்ள பங்களிப்பைச் செய்துள்ளது. 2002ஆம் ஆண்டில் கைத்தொழில் அமைச்சு, கைத்தொழிற்துறை தொடர்பில் சுத்த உற்பத்திக் கொள்கையை வகுத்தமைத்துள்ளது.

தேசிய சுத்த உற்பத்தி நிலையம்

தேசிய சுத்த உற்பத்தி நிலையம் 2002 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. உலகில் 24ஆவது சுத்த உற்பத்தி நிலையமாக விளங்கும் இந்த நிலையத்தின் நோக்கம் அடிப்படையில் முற்போந்தமாக பந்தியிற் குறிப்பிடப்பெற்ற எய்துவதற்கு கைத்தொழிலர்களுக்கு உதவுவதாகும். இந்த வேலைத்திட்டத்தின் செயற்படுத்தல் முறைமையாக கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு விளங்கும் அதே வேளையில் அதன் நிறைவேற்று முகாமையாக இலங்கை வர்த்தக, கைத்தொழிலர் குழுமங்களின் சம்மேளனம் (FCCISL) விளங்குகிறது.

வேலைத்திட்டத்துக்கு ஆகும் மொத்தச் செலவு 17.3 மில்லியன் குரோணர்கள். இதில் NORAD இனது பங்களிப்பு 13 மில்லியன் குரோணர்கள் ஆகும். இதில் UNIDO இடமிருந்து தொழின்நுட்ப உதவியாகப் பெற்ற நன்கொடைக் கூறும் உள்ளது. இதன் பெறுமதி ஏறுத்தாழ 4.5 மில்லியன் குறோனர்கள். வாழ்க்கை வட்ட மதிப்பீடு, சிக்கன திட்டமிடல், உலகளாவிய அறிவித்தல் முன்முயற்சிகள், சுற்றாடல் முகாமைச் சேவைகள், கூட்டுறவுச் சமூகப் பொறுப்புக்கள் போன்ற நவீன சுற்றாடல் முகாமைச் சாதனங்களை அறிமுகஞ் செய்வதனூடாக சுத்த உற்பத்தியை ஒரு அடிமட்டச் சாதனமாகக் கொண்டு தேசிய சுத்த உற்பத்தி நிலையம் நிலைபெறத்தக்க உற்பத்தி, நுகர்வுக் கருத்தை மேம்படுத்தி வருகிறது. தேசிய சுத்த உற்பத்தி நிலையத்தின் முயற்சிகள் யாவும் இலங்கையின் சட்டங்கள் ஒழுங்கு விதிகளுக்கு இணங்கவும் இலங்கை ஒரு தரப்பினராக விளங்கும் சருவதேயச் சமவாயங்கள், உடன்படிக்கை மூலங்களுக்கு அமையவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் ஜொனெஸ்பேக் உச்சி மாநாட்டுப் பிரகடனங்களும் மில்லெனியம் அபிவிருத்தி இலக்குகளும் அடங்கும்.

2005 இன் இறுதி வரையில் தேசிய சுத்த உற்பத்தி நிலையத்தின் முயற்சிகள்

நோக்கங்களும் குறிக்கோள்களும்

 • அக்கறைதாரர்கள் அனைவரிடையேயும் (கைத்தொழில்கள், வங்கிகள், சேவை வழங்குநர்கள், அரசாங்கத் தொழின் முயற்சிகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், தொழிற் சமாசங்கள் போன்றவை) விழிப்புணர்வைக் கட்டி எழுப்புதல்.
 • உசாவலர்கள்/ கணக்காய்வாளர்கள்/ வசதியேற்பாட்டாளர்களை பயிற்றுவிப்பதற்கான CP பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும் அவற்றுடன் தொடர்புற்ற சுற்றாடல் முகாமைச் சாதனங்கள், தொழில்நுட்பங்களும்.
 • செயன்முறைக் காட்டல் வேலைத்திட்டங்கள் அடங்கலாக CP செயல்வழக்குகளை செயற்படுத்துவதற்குரிய கைத்தொழில்களுக்கான அறிவுரை பகருகை, மதியுரைச் சேவைகள்.
 • பல்கலைக்கழகக் கல்வியாளர்களை பயிற்றுவதுடன் CP இனை பல்கலைக்கழகப் பாடவிதானத்தில் அறிமுகஞ் செய்தல்.
 • கைத்தொழிலர்களுக்கும் ஏனைய அக்கறையுள்ள தரப்பினர்களுக்குமான தகவல் பரப்புகை.
 • CP முதலீடும் நிதியளிப்பும்
 • CP கொள்கை அபிவிருத்தி

2005 திசெம்பர் வரையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

 • 2002 முதல் 67 விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன. அவற்றில் 2596 பேர் பங்குபற்றியுள்ளனர்.
 • பங்குபற்றியோர் விபரங்கள்
 • கைத்தொழிலதிபர்கள் /முகாமையாளர்கள்
 • வங்கி ஆளணியினர்
 • பல்கலைக்கழக கல்வியாளர்கள்
 • உள்ளூர் அதிகாரபீட உத்தியோகத்தர்கள்
 • அரசாங்கத்துறை உத்தியோகத்தர்கள்
 • பாடசாலை ஆசிரியர்கள் /சிறுவர்கள்
 • கைத்தொழில் வலயப் பணியாளர்கள்

பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்

 • 1065 பேர் 3698 பயிற்சி நாள்களிற் பயிற்றுவிக்கப்பட்டனர்.
 • பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் மேவப்பட்ட வகைகள் /துறைகள்
 • CP உசாவலர்கள் /கணக்காய்வாளர்கள் /தங்கிப் பணியாற்றுவோர் பயிற்சி
 • சக்தி உசாவலர்கள் /முகாமையாளர் பயிற்சி
 • பல்கலைக்கழகப் பாடவிதான அபிவிருத்தி
 • வாழ்க்கை வட்ட மதிப்பீடு (LCA )
 • உற்பத்திப் பொருள்களின் சிக்கன வடிவமைப்பு
 • சுற்றாடல் முகாமைக் கணக்கீடு
 • உலோக முடித்தற் கைத்தொழிற் பயிற்சி
 • உலகளாவிய அறிவித்தல் முன்முயற்சிப் பயிற்சி (GR )
 • comfar iii வேலைத்திட்ட முகாமை
 • சுற்றாடல் முகாமை
 • சுற்றாடல் முகாமை நடத்துநர்
 • இடரார்ந்த கழிவுப் பொருள் முகாமை
 • கழிவுப் பொருள் மீளப் பயன்படுத்துதல் நிகழ்ச்சித் திட்டம் (கடதாசி/ பிளாஸ்ரிக்)

செயல்முறைகாட்டு வேலைத்திட்டங்கள்

 • இறப்பர் துறை
  - மரப்பால், கிறேப்பு, தாழ்த்து உற்பத்திப் பொருள்கள், நுரை இறப்பர்பால் பொருள்கள், திண்ம இறப்பர் என்பவற்றுக்கான 5 தொழிற்சாலைகள்.
 • தேங்காய்த் துறை
  - வயம்பவில் 4 உலர்த்திய தேங்காய் தொழிற்சாலைகள்.
 • புடைவை, ஆடை
  - 5 புடைவை, ஆடைக் கைத்தொழில்கள்.
 • விடுதித் துறைr
  - நட்சத்திர வகுப்பீட்டுடன் 05 சுற்றுலர விடுதிகள்.
 • தேயிலைத் துறை
  - கம்பகாவில் 3 தொழில்சாலைகளும் இரத்தினபுரியில் 2 தொழிற்சாலைகளும்.

CP உசாவலர்கள்/கணக்காய்வாளர்கள்

 • NCPC 47 தொழிற்சாலைகளில் அகல்விரிவான மதிப்பீடுகளை நடத்தியுள்ளது.
  - 1716 கழிவுப் பொருள் குறைத்தல் விருப்புத் தெரிவுகள் இனங் காணப்பட்டன.
  - 55% குறைந்த செலவு விருப்புத் தெரிவுகள் செயற்படுத்தப்பட்டன.
  - 27% நடுத்தரச் செலவு விருப்புத் தெரிவுகள் ஒருசில மட்டும் செயற்படுத்தப்பட்டன.
  - எஞ்சிய 18% பாரிய முதலீடுகள் - குறைந்த செலவு நிதியளிப்பு இல்லாமை காரணமாக கைத்தொழில்களால் செயற்படுத்தப்பட்டு இருக்கவில்லை.
 • இது 55 விரைந்த CP மதிப்பீடுகளையும் நடாத்தியுள்ளது.

பிற முயற்சிகள்

 • NCPC ஆனது உசாவல் வழங்கல் மூலம் கைத்தொழில்கள் ISO 14001 சான்றிதழ்களைப் பெறுவதற்கு உதவியுள்ளது. (தங்கொட்டுவை கைத்தொழிற் பேட்டை)
 • தெரிந்தெடுத்த மூன்று உற்பத்திப் பொருள்களின் சுற்றாடல் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கு NCPC சிக்கன வடிவமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
 • நாட்டின் புத்தாக்கத்தை/சிக்கன புத்தாக்கத்தை விருத்தி செய்வதற்கு NCPC நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
 • கழிவுப் பொருள் முகாமைக்கு உதவுவதன் பொருட்டு NCPC சுகாதார அமைச்சு இணைந்து தொழிற்பட்டு வருகிறது.
 

புதிய செய்திகள்

.

 

 

 

 

 

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது : 19-01-2022.
காப்புரிமை © 2022 கைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.